ரமழான் மாதம் வந்துவிட்டால் "இப்தார்' நிகழ்வுகளுக்குப் பஞ்சமிருக்காது.
முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதவர்கள் கூட தமது அன்பையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்துவதற்காக இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.
கடந்த வாரம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வுக்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது.
ஏதாவது ஒரு ஆடம்பர ஹோட்டலில் நடக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் அழைப்பைப் பிரித்தேன்.
ஆச்சரியமாகவிருந்தது. திம்பிரிகஸ்யாயவிலுள்ள அனாதைப் பெண் பிள்ளைகள் தங்கியிருக்கும் பாத்திமா நலன்புரி நிலையத்தில்தான் குறித்த இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர்களைத் தவிர வேறு எந்த அரசியல் பிரமுகர்களோ, முக்கயஸ்தர்களோ இதற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.
அந்த நலன்புரி நிலையத்தில் தங்கியிருக்கும் பெண் பிள்ளைகளின் அன்றைய தினத்திற்கான உணவுச் செலவையும் அமெரிக்க தூதரகமே பொறுப்பேற்றிருந்தது.
அமெரிக்க தூதுவரும் நோன்பு பற்றியும் அங்கு தங்கியிருக்கும் பிள்ளைகளின் குறை நிறைகள் பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த வாரம் கொழும்பில் மற்றுமொரு இப்தார் நடந்தது. இரண்டு முஸ்லிம் பெரியார்களின் பெயரால் நடத்தப்பட்ட அந்த இப்தாருக்கான மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?
18 இலட்சங்கள்!!!
அவர்கள் எங்கே?
நம்மவர்கள் எங்கே?
09.09.2010

அஸ்ஸலாமு அலைக்கும் பைரூஸ்...பதிவுகள் அருமை.. தொடர்ந்தும் சொல்லுங்கள்..வாசிக்கின்றோம்.
ReplyDeleteநன்றி இஸ்மத் அலி.... உங்களைப் போன்றவர்களின் வருகை என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் வாருங்கள்...உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் கூட பதியுங்கள்...
ReplyDelete