Wednesday, 24 November 2010
டெக்னிக்
சில வாரங்களுக்கு முன்னர் என்னுடைய நண்பர் ஒருவர் தனது வேலைவாய்ப்பு விடயமாக கல்வித் துறையிலுள்ள முஸ்லிம் அதிகாரி ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தார்.
குறித்த வேலைவாய்ப்பை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என சில ஆலோசனைகளை வழங்கிய அந்த அதிகாரி வேறு சில அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் மூலமாகவே எனது நண்பர் எதிர்பார்க்கும் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் "தம்பி... என க்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?" எனக் கேட்டுவிட்டு "என்னுடைய மொபைலுக்கு ஒரு சிறு தொகைக்கு ரீ லோட் போட வேண்டும்" என்றிருக்கிறார்.
எனது நண்பரும் சரி எனச் சொல்லிவிட்டு தன்னுடைய கையடக்கத் தொலைபேசி மூலமாக அந்த இடத்திலேயே ஒரு தொகையை அந்த அதிகாரியின் மொபைலுக்கு மாற்றீடு செய்திருக்கிறார்.
இச் சம்பவத்தைக் கூறிய எனது நண்பர், குறித்த அதிகாரி தன்னிடமிருந்து எதையோ எதிர்பார்த்ததாகவும் ஆனால் எதுவும் கிடைக்காது எனத் தெரிந்த நிலையிலேயே ரீலோட் தந்திரத்தைப் பாவித்ததாகவும் குறிப்பிட்டார்.
போக்குவரத்துப் பொலிசார் அடிக்கடி பயன்படுத்தும் இந்த இலஞ்சம் வாங்கும் டெக்னிக்கை தற்போது அதிகாரிகளும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல உதாரணம்தான் போங்கள்...
Sunday, 14 November 2010
விடிவெள்ளி
விடிவெள்ளியின் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் இக் காலப்பகுதியில் அதன் ஆரம்ப காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
விடிவெள்ளி என்றொரு பத்திரிகை வெளிவரவுள்ளதை அறிந்து கொண்ட எனது ஊடக நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது பற்றிய தனது நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டார்.
இப்படியொரு பத்திரிகை அவசியம்தானா என்றும் அது பற்றி தனக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். நானும் என்னால் முடிந்த விளக்கங்களை அளித்தேன். ஆனாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இது நடந்த சில மாதங்களின் பின்னர் தொடர்பு கொண்ட அவர் விடிவெள்ளியின் பணியை மெச்சியதோடு தன்னுடைய ஆக்கம் ஒன்றினை விடிவெள்ளியில் பிரசுரிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மட்டுமன்றி சில மாதங்களுக்கு முன்னர் என்னை நேரில் சந்தித்த அவர் தனக்கு விடிவெள்ளியில் ஒரு வேலைவாய்ப்பைத் தர முடியுமா என்றும் கேட்டார்.
இதேபோன்றுதான் அப்போது விடிவெள்ளியை கடுமையாக விமர்சித்த பலரும் இன்று எம்மை அணுகி அவர்களது செய்திகளையும் கட்டுரைகளையும் பிரசுரிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதையும் விடிவெள்ளியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்க முன்வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது.
விடிவெள்ளியை சந்தேகக் கண்கொண்டு நோக்கியவர்களை சந்தோஷிக்கச் செய்து விட்டோமே...?
அல்ஹம்துலில்லாஹ்.

எப்படியெல்லாம் கிளம்புறாங்கப்பா...?
சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு மருதானை பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கையில் "தொர..தொர...அஸ்ஸலாமு அலைக்கும்..." என அழைக்கும் குரல் கேட்டது.
நான் கேட்டும் கேட்காதது போல் நடந்தாலும் அக்குரல் விடவில்லை. பின்தொடர்ந்து வந்து கையைப் பிடித்து இழுத்து "தொர... நான் சொல்றத்த கொஞ்சம் கேளுங்க... எனக்கு ஆஸ்துமா நோய் தொர... முடிந்தால் 48 ரூபாய்க்கு ஒரு குளிசை பக்கெற் வாங்கித் தர முடியுமா?" எனக் கேட்டார். நான் 100 ரூபா பணத்தை அவரிடம் நீட்டிய போது "இல்ல தொர... நீங்களே உங்க கையால வாங்கித் தாங்க...அல்லாஹ்ட பறக்கத் உங்களுக்கு கிடைக்கும்" என்றார்.
அருகிலுள்ள பார்மசிக்குச் சென்று அவர் கேட்ட குளிசையை அதே விலைக்கு வாங்கிக் கொடுத்தேன். என் முன்னாலேயே ஒரு குளிசையை விழுங்கினார்.
மீதி 52 ரூபாவையும் அவரிடமே கொடுத்துவிட்டு நான் நடையைக் கட்டியபோது மீண்டும் அழைத்தார் "தொர... வீட்ட புள்ளைகலெல்லாம் ஒரு கிழமையா ஒழுங்கா சாப்பிடல்ல தொர... முடிஞ்சா...." என்று இழுத்தார்... நானும் பரிதாபத்தில் இன்னும் சில நூறு ரூபாய்களைக் கொடுத்துவிட்டு அவரது கஷ்ட நிலையைப் பற்றிக் கவலைப்பட்டவாறே நடந்தேன்.. ஆனால் துரதிஷ்டவசமாக ஓரிரு நாட்களின் பின்னர்தான் அவரது சுயரூபம் தெரியவந்தது. அவர் தனது நோயைப் பயன்படுத்தி இப்படித்தான் எல்லோரையும் ஏமாற்றிப் பிழைப்பவர் என்று.... சில தினங்களுக்கு முன்னர் கூட அவர் இதே பாணியில் கிராண்ட்பாஸ் பகுதியில் பிச்சை எடுப்பதை கண்டேன்...

Subscribe to:
Posts (Atom)