Thursday, 28 October 2010
`முஸீபத்......!'
ஒரு வார காலத்திற்கு முன்னர் கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு ஏற்பாட்டாளர்களின் அழைப்பின்பேரில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தோம்.
மிக முக்கியமான உலமாக்கள் பங்கேற்றிருந்த இந் நிகழ்வை கமெராவில் படம் பிடிப்பதற்கு முயற்சித்தபோது எம்மை நோக்கி வந்த இருவர் பள்ளிவாசலுக்குள் போட்டோ எடுப்பது கூடாது என்றார்கள். அதில் ஒருவர் "இது `முஸீபத்'.... இந்த முஸீபத்தையெல்லாம் பள்ளிக்குள் கொண்டு வருகிறீர்களே"என்று சூடாகினார்.
பள்ளிவாசலின் புனிதத் தன்மையை மதித்தும் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கிலும் நாம் அமைதியாக இருந்துவிட்டோம்.
இச் சம்பவம் நடந்தபோது இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்றுதான் எண்ணத் தோன்றியது.
கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட கருத்து இந்த இடத்தில் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது.
"யூதர்களும் இஸ்லாத்தின் எதிரிகளும் செவ்வாய்க் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவது பற்றிச் சிந்திக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் சமூகமோ புகைப்படம் எடுப்பது ஹலாலா? ஹராமா? என விவாதிப்பதில் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது."
அன்று மட்டுமல்ல; இன்றும் கூட பொருந்துகின்ற எவ்வளவு ஆழமான கருத்து இது!
Friday, 22 October 2010
எஸ்.எம்.எஸ் முட்டாள்கள்!
சில வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதில் "சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ... சுப்ஹானல்லாஹில் அழீம்...." என ஆரம்பமாகும் பிரார்த்தனை ஒன்றைக் குறிப்பிட்டு குறித்த கலிமாவை 12 பேருக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்புமாறும் அவ்வாறு அனுப்பினால் 12 மணி நேரத்திற்குள் பொருளாதார நிலை மேம்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மட்டுமன்றி இந்தச் செய்தி 100 வீதம் உத்தரவாதம் கொண்டது எனவும் தயவு செய்து இதனை அலட்சியம் செய்து விட வேண்டாம் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தக் குறுஞ் செய்தியை பார்த்த போது சிரிப்புத்தான் வந்தது. முன்னர் `மக்கா மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்' எனக் குறிப்பிட்டு ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படும். அதனை போட்டோ பிரதி செய்து விநியோகிக்குமாறும் அவ்வாறு செய்தால் சில தினங்களுக்குள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் எனவும் குறித்த துண்டுப் பிரசுரத்தை கிழித்து வீசினாலோ அல்லது அலட்சியம் செய்தாலோ விரைவில் ஆபத்துக்கள் நேரிடும் என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.
பரவாயில்லை... அன்று துண்டுப் பிரசுரம் மூலம் இந்த மூட நம்பிக்கைகளைப் பரப்பிய முட்டாள்கள் இன்று சற்று முன்னேறி எஸ்.எம்.எஸ்.வழியாக பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால் பாவம். இந்த முட்டாள்களின் பொருளாதார நிலை முன்னேறுகிறதோ இல்லையோ கையடக்கத் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் பொருளாதாரம் மாத்திரம் நிச்சயம் முன்னேற்றமடையும் என்பது மட்டும் உண்மை.

ஆசிரியர்களுக்குப் புரிந்தால் சரி.
அண்மையில் வெளிவந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியோரில் 90 வீதமானோர் சித்தியடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்தியடைந்த மாணவர்கள் பற்றி அதிகம் பேசப்பட்டாலும் சித்தியடையாத மாணவர்கள் அடையும் உளவியல் ரீதியான தாக்கம் குறித்து பேசப்படுவது மிக மிகக் குறைவு என்றே சொல்லலாம்.
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான மறுதினம் உளவளத் துணையாளர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் ஒரு ஆசிரியர்.
தனது மகன் இம் முறை புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் ஓரிரு புள்ளிகளால் சித்தியடையத் தவறிவிட்டதாகவும் பெறுபேறு வெளியானதிலிருந்து தனது மகனால் வாய் திறந்து பேச முடியாதிருப்பதாகவும் அழாக் குறையாகவும் பதற்றத்துடனும் குறிப்பிட்டார்.
தனது மகனை அதிர்ச்சியிலிருந்து எப்படி மீட்பது எனவும் அவர் குறித்த உளவளத் துணையாளரிடம் ஆலோசனை கேட்டார். அவருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கிய உளவளத் துணையாளர் ஒரு முக்கிய உண்மையையும் என்னோடு பகிர்ந்து கொண்டார்.
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறும் பிள்ளைகளில் அதிகம் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்படுவது ஆசியர்களின் பிள்ளைகளே என புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமது பிள்ளைகள் மீது ஆசிரியர்களான பெற்றோர்கள் அதிக அழுத்தங்களைப் பிரயோகிப்பதே இதற்குக் காரணம் என்றும் அவர் சொன்னார்.

வேலியே பயிரை மேய்கிறது...
கடந்த வாரம் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவரைச் சந்தித்தேன்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வரும் வழியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய மேலும் சில பயணிகளுடன் குறித்த சகோதரரும் வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார். வரும் வழியில் களனி பாலத்துக்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இவர்கள் பயணித்த வேன் மறிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை அறிந்து கொண்ட பொலிசார் இவர்களது பைகளை தீவிரமாகச் சோதனையிட்டதுடன் அவற்றிலிருந்த பெறுமதிவாய்ந்த பொருட்களை சுருட்டத் தொடங்கியுள்ளனர். குறித்த சகோதரர் கொண்டு வந்த சுமார் 8 கையடக்கத் தொலைபேசிகளில் சிலவற்றையும் பொலிசார் பலவந்தமாகப் பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளனர். அத்துடன் வேனில் இருந்தவர்கள் சகலரிடமிருந்தும் வெளிநாட்டு இனிப்புப் பண்டகளையும் வாசனைத் திரவியங்களையும் கூட அவர்களின் அனுமதியின்றியே பொலிசார் எடுத்துக் கொண்டுள்ளனர்.
தனது பொருட்களைத் தருமாறு கேட்டும் பொலிசார் தர மறுத்ததால் உடனடியாகவே `பொக்கற்'றிலிருந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி `இவர் எனது உறவினர்தான்...' எனக் கூறியுள்ளார் அவர். அதன் பின்னர்தான் `சொறி மாத்தையா' எனச் சொல்லி விட்டு கொஞ்சம் டொபிகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு வேனை விட்டார்களாம்... பாருங்கள்.... வேலியே பயிரை மேய்கிறது இந்த நாட்டில்....

Subscribe to:
Posts (Atom)

.jpg)