Sunday, 14 November 2010

எப்படியெல்லாம் கிளம்புறாங்கப்பா...?

சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு மருதானை பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கையில் "தொர..தொர...அஸ்ஸலாமு அலைக்கும்..." என அழைக்கும் குரல் கேட்டது.

நான் கேட்டும் கேட்காதது போல் நடந்தாலும் அக்குரல் விடவில்லை. பின்தொடர்ந்து வந்து கையைப் பிடித்து இழுத்து "தொர... நான் சொல்றத்த கொஞ்சம் கேளுங்க... எனக்கு ஆஸ்துமா நோய் தொர... முடிந்தால்  48 ரூபாய்க்கு ஒரு குளிசை பக்கெற் வாங்கித் தர முடியுமா?" எனக் கேட்டார். நான் 100 ரூபா பணத்தை அவரிடம் நீட்டிய போது "இல்ல தொர... நீங்களே உங்க கையால வாங்கித் தாங்க...அல்லாஹ்ட பறக்கத் உங்களுக்கு கிடைக்கும்" என்றார்.

அருகிலுள்ள பார்மசிக்குச் சென்று அவர் கேட்ட குளிசையை அதே விலைக்கு வாங்கிக் கொடுத்தேன். என் முன்னாலேயே ஒரு குளிசையை விழுங்கினார்.

மீதி 52 ரூபாவையும் அவரிடமே கொடுத்துவிட்டு நான் நடையைக் கட்டியபோது மீண்டும் அழைத்தார் "தொர... வீட்ட புள்ளைகலெல்லாம் ஒரு கிழமையா ஒழுங்கா சாப்பிடல்ல தொர... முடிஞ்சா...." என்று இழுத்தார்... நானும் பரிதாபத்தில் இன்னும் சில நூறு ரூபாய்களைக் கொடுத்துவிட்டு அவரது கஷ்ட நிலையைப் பற்றிக் கவலைப்பட்டவாறே நடந்தேன்.. ஆனால் துரதிஷ்டவசமாக ஓரிரு நாட்களின் பின்னர்தான் அவரது சுயரூபம் தெரியவந்தது. அவர் தனது நோயைப் பயன்படுத்தி இப்படித்தான் எல்லோரையும் ஏமாற்றிப் பிழைப்பவர் என்று....  சில தினங்களுக்கு முன்னர் கூட அவர் இதே பாணியில் கிராண்ட்பாஸ் பகுதியில் பிச்சை எடுப்பதை கண்டேன்...

எப்படியெல்லாம் கிளம்புறாங்கப்பா...?

No comments:

Post a Comment