கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.
குறித்த நிகழ்வு இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் 8 மணிக்கே ஆரம்பமாகியது. நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் செயலாளர் ஆற்றிய அறிமுக உரை மாத்திரம் சரியாக 50 நிமிடங்களுக்கு நீண்டது. தொடர்ந்து வந்த அமைப்பின் பொருளாளரோ அங்கு வந்திருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரை மணி நேரமாக "அறிவுரை' வழங்கினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரும் தன்பாட்டுக்கு நேரத்தை நீட்டிக் கொண்டே சென்றார். அதன் பின்னர் அதிதி உரை, பாராட்டைப் பெற்றவரின் ஏற்புரை.... என தொடர்ந்து ஈற்றில் பங்குபற்றுனர்களின் கருத்துக்கும் இடம்வழங்கப்பட அதனைப் பயன்படுத்தி ஒரு அரசியல்வாதியும் எழுந்துநின்று தன்பாட்டுக்கு அளக்கத் தொடங்கினார்.
மொத்தத்தில் இரவு 10.30 மணிக்குத்தான் நிகழ்வு "இனிதே' நிறைவுபெற்றது. நம்மவர்களுக்கு "மைக்' மாத்திரம் கிடைத்துவிட்டால் போதும்; காலம் நேரம் புரியாமல் கதை அளக்கத் தொடங்கிவிடுவார்கள்.
உலகில் பிரபல்யம்பெற்ற மனிதர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் நிகழ்வு ஒன்று வாராந்தம் அமெரிக்காவில் நடக்கிறது.
சரியாக 20 நிமிடங்களுக்குள் மாத்திரம் தாங்கள் சொல்ல வரும் செய்தியை மிகக் கச்சிதாகச் சொல்லிவிடுகிறார்கள் அவர்கள்.
வேண்டுமானால் www.ted.com எனும் தளத்துக்கு ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்...
12.08.2010

No comments:
Post a Comment