இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு வயதான முஸ்லிம் சகோதரர் எமது அலுவலகத்திற்கு வந்திருந்தார். தமது குடும்பத்தில் நடந்த ஒரு அலவச் சம்பவத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அவரது மனைவிக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமது மகன் தனது சிறுநீரகம் ஒன்றை வழங்க முன்வந்துள்ளார். ஆனால் அவர் அதற்காக சுமார் 60 ஆயிரம் ரூபா பணத்தைக் கேட்டிருக்கிறார்.
இவர்களும் அதைப் பெரிதுபடுத்தாது பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த `அன்பு மகனோ' பணத்தைப் பெற்றுக் கொண்டு சிறுநீரகத்தை தர மறுத்திருக்கிறார்.
தனக்கு வழங்கப்பட்ட பணம் போதாது என்றும் மேலதிகமாக பணம் தருமாறும் அவர் கேட்டிருக்கிறார்.
தற்போது பெற்றோர் வசித்து வரும் வீட்டை விற்றாவது தனது தொழிலுக்காகப் பணம் தருமாறு கேட்டிருக்கிறார்.
மகனின் இந்தப் பிடிவாதம் மற்றும் மனிதாபிமானமற்ற செயல் காரணமாக இதுவரை அந்தத் தாய்க்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.
மகனின் இந்த செயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்தத் தந்தை பத்திரிகை வாயிலாக பொது மக்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுத் தருமாறு கோரவே எமது அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
இப்படியும் ஒரு கல்நெஞ்சன் இருக்கிறானே?

சகோதரரே, நாங்கள் மிகவும் பய்aங்கரமான காலத்தில் வழ்கிறோம். இஸ்லாமிய சமூகத்தில் சடவாதம் தலைவிருத்து ஆடுகிறது. இதிலும் மிகவும் கவலையான விடயம் என்னவென்றால் நன்கு மார்க்கத்தை கற்ற இளம் ஆலிம்கள், அதுவும் இலங்கையின் முக்கியமான அரபு மத்ரஸாக்களில் கற்ற உலமாக்கள் சீதனம், தொழில், வெளிநாட்டுக் கல்வி எனும் பெயர்களில் தஜ்ஜால்களைப் போல் பணவெறி பிடித்து அலைவதும் தான்கள் கற்ற இஸ்லாமியக் கல்விக்கும் தமது வாழ்க்கைகும் எந்த தொடர்பும் இன்றிவாழ்வது தான். தென்மாகாணத்தில் வசிக்கும் நான் எமது பிரதேசத்தில் மாத்திரம் சந்தித்த இவ்வாறான பணப்பிசாசுகளை விரைவில் சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டவுள்ளேன், இன்ஷா-அல்லாஹ்.
ReplyDelete