சில வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதில் "சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ... சுப்ஹானல்லாஹில் அழீம்...." என ஆரம்பமாகும் பிரார்த்தனை ஒன்றைக் குறிப்பிட்டு குறித்த கலிமாவை 12 பேருக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்புமாறும் அவ்வாறு அனுப்பினால் 12 மணி நேரத்திற்குள் பொருளாதார நிலை மேம்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மட்டுமன்றி இந்தச் செய்தி 100 வீதம் உத்தரவாதம் கொண்டது எனவும் தயவு செய்து இதனை அலட்சியம் செய்து விட வேண்டாம் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தக் குறுஞ் செய்தியை பார்த்த போது சிரிப்புத்தான் வந்தது. முன்னர் `மக்கா மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்' எனக் குறிப்பிட்டு ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படும். அதனை போட்டோ பிரதி செய்து விநியோகிக்குமாறும் அவ்வாறு செய்தால் சில தினங்களுக்குள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் எனவும் குறித்த துண்டுப் பிரசுரத்தை கிழித்து வீசினாலோ அல்லது அலட்சியம் செய்தாலோ விரைவில் ஆபத்துக்கள் நேரிடும் என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.
பரவாயில்லை... அன்று துண்டுப் பிரசுரம் மூலம் இந்த மூட நம்பிக்கைகளைப் பரப்பிய முட்டாள்கள் இன்று சற்று முன்னேறி எஸ்.எம்.எஸ்.வழியாக பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால் பாவம். இந்த முட்டாள்களின் பொருளாதார நிலை முன்னேறுகிறதோ இல்லையோ கையடக்கத் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் பொருளாதாரம் மாத்திரம் நிச்சயம் முன்னேற்றமடையும் என்பது மட்டும் உண்மை.

குறிப்பு: நானும் அப்படிதான் நினைத்து கொண்டிருதேன் ஆனால் இன்று(22 10 2010 ) ஜும்மா தொழுகைக்கு சென்ற போது ஒரு சகோதரர்(இளைஞர்) மும்முரமாக ஏதோ ஒரு தாளை விநியோகித்து கொண்டிருந்தார். ஏதோ புரட்சிகரமான அறிவிதலாயிருக்குமோ என்று ஆவலில் நானும் ஒரு தாளை பெற்றுக் கொண்டேன் என்றாலும் பிரித்து பார்த்த போது ஏமாற்றம் தான் மிச்சம். அதே பழைய உண்மைச் சம்பவம்(மதினாவில் கண்ட கனவு). நாம் சிந்திக்க மாட்டோம் சிந்திக்கவும் தெரியாது(வடிவேலுவின் பாணியில்)
ReplyDelete